×

திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரசாரம்

நாமக்கல், டிச. 27: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து, மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், கடந்த ஒரு வாரமாக  வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள, பல்வேறு ஊராட்சிகளிலும்  தீவிரமாக வாக்கு சேகரித்தார். கட்டநாச்சம்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரம் செய்தார். திமுக மற்றும் கூட்டணி  கட்சியினருடன் வீதி, வீதியாக சென்று ராஜேஸ்குமார் ஆதரவு திரட்டினார். திமுக ஆட்சியின் போது கிராமங்களில் தார்சாலைகள், கான்கிரிட் சாலைகள் அமைக்கப்பட்டது. பெண்களின் வாழ்க்கை தரம் உயர பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறி, வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது ஊராட்சி செயலாளர் ஜம்பு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூபாலன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அண்ணாமலை, கிளை செயலாளர் நடராஜ் மற்றும் திமுகவினர் வாக்குசேகரிப்பின் போது  கலந்து கொண்டனர்.

Tags : District Youth Team ,DMK ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...